இனிமேல் இப்படித்தான்.. அமித் ஷா அனுப்பிய மெசேஜ்.. ப.சி கைதால் கடும் கலக்கத்தில் காங்கிரஸ் கட்சி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப.சிதம்பரத்தின் கைது பின்னணி என்ன?- வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இன்று ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    காங்கிரஸ் கட்சியில் ஒரு காலத்தில் பிரதமராக வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டவர்தான் ப. சிதம்பரம். அவருக்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவி கூட காத்துக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய ''வைட் காலர்'' உறுப்பினர்களில் ப. சிதம்பரம்தான் நம்பர் 1. தற்போது அவரைத் தான் சிபிஐ கைது செய்துள்ளது.

    எப்படி

    எப்படி

    தொண்டர்களை நம்பாமல் அரசியலை மட்டுமே நம்பி தொடர் வெற்றிகளை குவித்தவர்தான் ப. சிதம்பரம். எதையும் சரியான புள்ளி விவரத்துடன் அணுக கூடிய இவர், முக்கியமான விஷயங்களில் எப்போதும் கவனமாக இருப்பார். இப்போது காங்கிரசில் டாப் அரசியல் தலைவர் யார் என்றால் அது ப. சிதம்பரம்தான் என்று கூட கூறி விடலாம்.

    என்ன உச்சம்

    என்ன உச்சம்

    ஆனால் அவரையே சிபிஐ கைது செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் உச்சத்தை சீண்டி இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை அதிர வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி குடும்பத்திற்கு பின் அதிக சக்தி வாய்ந்த நபர் என்றால் அது ப. சிதம்பரம்தான். தற்போது அவரையே சிபிஐ ஆட்டம் காண வைத்துள்ளது.

    என்ன கலக்கம்

    என்ன கலக்கம்

    இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மொத்தமாக கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ப. சிதம்பரம் மீது கை வைத்தவர்களுக்கு நம் மீது கை வைக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று பலர் நடுங்க தொடங்கி உள்ளனர். அமித் ஷா இனி யாரை குறி வைப்பார் என்று எல்லோரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

    அமித் ஷா

    அமித் ஷா

    ப . சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம் அமித் ஷா மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இனி இப்படித்தான் நடக்க போகிறது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ப. சிதம்பரத்தை நெருங்கியவர்களுக்கு சோனியாவையும், ராகுலையும் நெருங்க அதிக நாட்கள் ஆகாது என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+