மோடி பற்றி அவதூறு பேச்சு.. விமானத்தில் இருந்து இறக்கி காங். நிர்வாகி கைது.. சில மணி நேரத்தில் ஜாமீன்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அசாம் மாநில போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது
டெல்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேராவை அசாம் மாநில போலீசார், விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இந்த நிலையில் சில மணி நேரங்களில் உச்ச நீதிமன்றம் பவன் கேராவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் பவன்கேரா. டெல்லியை சேர்ந்த பவன் கேரா கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க முன்வராத மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸ்
தனது பேட்டியின் போது, "நரசிம்ம ராவ் ஜேபிசி அமைத்து இருக்கிறார். அடல் பிகாரி வாஜ்பாயாலும் ஜேபிசி அமைக்க முடியும் என்றால், நரேந்திர கவுதம் தாஸ்.. "மன்னிக்கவும்" தாமோதர்தாஸ் மோடிக்கு கூட்டுக்குழு அமைப்பதில் என்ன பிரச்சினை? என்று பேசியிருந்தார். பவன்கேராவின் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பவன் கேராவின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

விமானத்தில் இருந்து இறக்கி கைது
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலமாக சத்தீஷ்கருக்கு பவன் கேரா புறப்பட்டார். அப்போது விமான நிலையத்திற்கு வந்த அசாம் போலீஸ் அதிகாரிகள், முதல் தகவல் அறிக்கையை காட்டி பவன் கேராவை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய டார்மாக்கில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னிப்பு கோரிவிட்டதாக..
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட்டிடம் முறையிட்டார். பிற்பகல் 3 மணிக்கு இந்த முறையீட்டை வைக்குமாறு தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விவகாரம் 3 மணிக்கு முறையிடப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பவன் கேரா தவறு செய்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோரிவிட்டதாகவும் கூறினார்.

28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன்
மேலும், பவன் கேராவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரவில்லை. இடைக்கால நிவாரணம் தான் கோருகிறோம்" என்று வாதிட்டார். தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், "மனுதாரர் (பவன் கேரா) மன்னிப்பு கோரியிருக்கிறார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். பவன்கேராவிற்கு வரும் 28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. டெல்லி துவரகா நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை அளிக்கும்" என்று உத்தரவிட்டது.

கைது செய்வதற்கு தடை
மேலும் பல்வேறு மாநிலங்களில் பவன் கேராவிற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஒரே இடத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்குமாறு அசாம், உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், கைது செய்வதற்கு தடை மற்றும் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக மாற்றுவது தொடர்பான மனுவை வரும் 27 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்












Click it and Unblock the Notifications