தடுப்பு மையமா?.. முஸ்லீம்களை தவறாக வழி நடத்துகிறது காங்.. பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முஸ்லீம்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவர் என தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி அவர்களை தவறாக வழி நடத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் அவர் கூறுகையில் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக 33 ஆயிரம் போலீஸார் தங்கள் வாழ்வை தியாகம் செய்துள்ளனர். இன்று அவர்களை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் எந்த போலீஸும் உங்கள் மதம் என்ன, ஜாதி என்ன என கேட்பதில்லை. வெயிலோ, மழையோ, காற்றோ, புயலோ , இரவு, பகலோ, நள்ளிரவோ அதிகாலையோ எப்போதும் அழைத்தாலும் அவர்கள் உங்களுக்கு உழைக்கிறார்கள்.

படித்து பாருங்கள்

படித்து பாருங்கள்

முஸ்லீம்கள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவர் என காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினரும், நகர்ப்புற நக்ஸல்களும் தவறான தகவலை பரப்புகின்றனர். உங்கள் கல்விக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் படித்தவர்கள். என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்டம் குறித்து என்ன இருக்கிறது என்பதை படித்து பாருங்கள்.

ஒரு சட்டம்

ஒரு சட்டம்

தேசிய குடிமக்கள் சட்டம் காங்கிரஸ் ஆட்சியின் போது அவர்கள் என்ன தூங்கிக் கொண்டிருந்தார்களா? என்ஆர்சியை அமைச்சரவையிலோ நாடாளுமன்றத்திலோ நாம் கொண்டு வரவில்லை. முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்க ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அதே கூட்டத் தொடரில் உங்களை அனுப்ப ஒரு சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோமா?

மறைக்க மாட்டார்கள்

மறைக்க மாட்டார்கள்

ஊடுருவல்காரர்களுக்கும் அகதிகளுக்கும் சிறிய வித்தியாசம்தான் உண்டு. ஊடுருவல்காரர்கள் தங்கள் அடையாளத்தை ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அகதிகளோ தங்கள் அடையாளத்தை ஒரு போதும் மறைக்க மாட்டார்கள். இது போன்ற ஊடுருவல்காரர்கள் வெளியே வந்து பேசி வருகிறார்கள். அவர்கள் ஏன் உண்மையை பேசவில்லை? உண்மை வெளியே வந்து விடும் என்பதை எண்ணி அவர்கள் பயப்படுகிறார்கள்.

சட்டவிரோத காலனி

சட்டவிரோத காலனி

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் இந்த சட்டவிரோத காலனியில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நகரிக்தா என பெயரிட்டனர். அந்த குழந்தை மற்றும் அவரது பெற்றோரின் வாழ்க்கை எளிதாக்கும்போதும், நாட்டின் குடிமக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்போதும் உங்களுக்கு (போராட்டக்காரர்கள்) ஏன் வலிக்கிறது? நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர மதங்களுக்காக அல்ல என்றார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+