எதிர்பாராத ட்விஸ்ட்.. பாலஸ்தீன ஆதரவால் காங்கிரஸில் பிளவு? காரிய கமிட்டி கூட்டத்தில் என்ன நடந்தது?
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே யுத்தம் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போது காங்கிரஸ் கட்சியில் புயல் வீசி தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 4 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை 1000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடிப்பதில் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை பொறுத்தமட்டில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது.
இருதரப்புக்கும் மோதல் தொடங்கி நாளிலேயே இதனை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார். இன்றைய தினம் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி இந்தியா இஸ்ரேலுடன் இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே நேற்று டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானமும் ஒன்றாகும்.
பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அந்த தீர்மானம் கூறியது. அதோடு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தையே சரியான தீர்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ள பாஜக, பயங்கரவாதிகள் பக்கம் நிற்பதுதான் காங்கிரஸ் கட்சியின் வேலை என்று சாடியுள்ளது. பாஜகவின் பல்வேறு தலைவர்கள் இதனை தொடர்ந்து கூறி காங்கிரஸ் கட்சியை அட்டாக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தால் அந்த கட்சியின் தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த தீர்மானம் என்பது காரிய கமிட்டி கூட்டத்தில் இருந்த அனைவராலும் மனதார ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சொல்லப்படுகிறது.
அதோடு காரிய கமிட்டி கூட்ட தீர்மானத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த விபரத்தை சேர்ப்பது பற்றி முன்கூட்டி எந்த அறிவிப்பையும் காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லையாம். திடீரென்று அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீன ஆதரவு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தால் அதன் தலைவர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அமெரிக்காவுக்கு முதல் பெரிய அடி.. ஈரான் நடத்திய தாக்குதலில் F-35 விமானம் சேதமடைந்ததாக தகவல்! -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
உலகை உலுக்கும் ஈரான் போர்.. எரிசக்தி விநியோகக் கட்டமைப்பு மொத்தமா காலி! பற்ற வைத்த அமெரிக்கா! -
ஈரானை விடுங்க.. இஸ்ரேலுக்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்! திசை மாறும் போர்! -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications