மோடி, அத்வானி, சு.சுவாமி... பாஜக தலைவர்களை மட்டுமே சந்திக்கும் வைகோ... காங்.-ல் புகைச்சல்!
Recommended Video
டெல்லி: ராஜ்யசபா எம்.பியாகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்? என்கிற புகைச்சல் அக்கட்சியில் கிளம்பியுள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியின் ஆதரவால்தான் வைகோ, ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார்.
வைகோவே பல இடங்களில், திமுக தலைவர் ஸ்டாலின் என்னை கட்டாயப்படுத்தி எம்.பி.யாக்கி இருக்கிறார். அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என கூறிவருகிறார்.

மோடியுடன் ரகசிய பேச்சு
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை திடீரென வைகோ சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மோடியுடன் பல விஷயங்களை விவாதித்தேன். அதை வெளிப்படுத்த முடியாது என புதிர் போட்டார்.

வாழ்த்திய சு.சுவாமி
முன்னதாக வைகோவின் பரம எதிரியான, வைகோவை ராஜ்யசபாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறிவந்த சுப்பிரமணியன் சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

சின்ஹாவுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவையும் வைகோ சந்தித்தார். இன்று மனைவி, மகன், மருமகளுடன் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காங்கிரஸ் அதிருப்தி
பாஜக தலைவர்களை மட்டும் சந்திக்கும் வைகோ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை கூட சந்தித்ததாக அவரது ஊடக தொடர்பாளர் தமது பதிவுகளில் போடவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் இருவரும் வைகோ நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினர். தொடர்ந்து பாஜக தலைவர்களை மட்டும் வைகோ சந்தித்து வருவது காங்கிரஸ் கட்சியில் ஒருவித சலசலப்பையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications