"எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது".. உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு.. காங்கிரஸ் வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் இந்த தீர்ப்பு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 10 சதவிகிதம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி. சி பிரிவை சேர்க்காதது தவறு கிடையாது என்று 3 நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

 தீர்ப்பு

தீர்ப்பு

இந்த நிலையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்று உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று கருத்து தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் எம்பி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக அளித்த பேட்டியில், இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிக சிறப்பானது. அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அதில் உள்ள உரிமைகளை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் வரவேற்பு

காங்கிரஸ் வரவேற்பு

இதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவை தவிர மற்ற பிரிவில் இருக்கும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்து உள்ள மக்கள் முன்னேற்றம் அடைய முடியும். இந்த திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான். பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போதுதான் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2005-06ல் இதற்காக சின்ஹோ கமிஷன் உருவாக்கப்பட்டது. அவர்கள் இதற்கான கணக்கெடுப்புகளை மேற்கொண்டனர்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

அதன் அடிப்படையில் 2010ல் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2014ல் இதற்காக வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. இதை பற்றி பல்வேறு ஆலோசனைகளை காங்கிரஸ்தான் செய்தது. நாங்கள் எடுத்த முயற்சிக்கான பலன்தான் தற்போது கிடைத்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொடக்கத்தில் இருந்து ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிபிஎம் கட்சியும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரித்தது.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஆனால் திமுக இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்து உள்ளது. சமூக நீதி போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவு இது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.

 ஸ்டாலின் அறிக்கை

ஸ்டாலின் அறிக்கை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+