2024 தேர்தலில் ஒரே எதிர்க்கட்சிதான்.. அது நாங்கதான்! பாஜகவை வீழ்த்த ஒன்றிணைவோம் என காங்கிரஸ் சூளுரை
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக வருவாய் என்று வெளியான கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
அதேபோல், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் திட்டம்
குறிப்பாக பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. அதே நேரம் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதால் அல்லது மாநில கட்சியின் தலைவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை எதிர்கொள்வதா என்ற குழப்பம் அவர்களிடையே நிலவி வருகிறது. எனவே எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்தும் இன்னும் முடிவாகவில்லை.

நிதீஷ் குமார் பேச்சு
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், "ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் நல்லதொரு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஓய்வெடுக்காமல் இதே வேகத்தில் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தால் பாஜகவை 2024 தேர்தலில் 100 தொகுதிகளுக்குள் சுருட்டி விடலாம் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மாநாடு
இதற்கிடையே வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ரவா ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய முழுவதும் இருந்து 15,000 பேர் கலந்துகொள்ள உள்ளார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தனர்.

2024 மக்களவை தேர்தல்
அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், "முதல் நாள் மாநாட்டில் காங்கிரஸ் செயற்குழு தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பங்கை அறிந்து வைத்து இருக்கிறது.

நாங்கள்தான் எதிர்க்கட்சி
எதிர்க்கட்சிகளுக்கு தலைமையேற்பது குறித்து எங்களுக்கு யாரும் சான்றிதழ் தர அவசியம் இல்லை. எங்கள் கடமையை நாங்கள் நன்கு அறிந்து இருக்கிறோம். பாஜகவுடன் கூட்டணி அமைக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்போம்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி
காங்கிரஸ் இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தோல்வி அடைந்துவிடும். நாங்கள் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறிய கருத்தை வரவேற்கிறோம். நமது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும். காங்கிரஸ் இல்லாமல் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜகவை மக்களவைத் தேர்தலில் எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியை நாம் அமைத்திடுவோம்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications