Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"40 சீட் கூட ஜெயிக்காது.. காங்கிரசுக்கு தைரியம் இருந்தால்.." பாயும் மம்தா! அப்போ "இந்தியா" கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா கூட்டணிக்கு மற்றொரு சிக்கலாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியை நேரடியாக விமர்சித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு இப்போது சிக்கல் மீது சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக உடன் கை கோர்த்துக் கொண்டார்.

 Congress will not win even 40 seats in Lok Sabha elections says Mamata Banerjee

இந்தச் சூழலில் இப்போது மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்து இருந்த நிலையில், இப்போது மம்தா பானர்ஜி நேரடியாகக் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸால் 40 இடங்களைக் கூடப் பெற முடியுமா என்று தனக்குச் சந்தேகம் இருப்பதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார். இது எதிர்க்கட்சியின் "இந்தியா" கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "காங்கிரஸ் கட்சி 300ல் 40 இடங்களில் வெல்லுமா என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிர்? நீங்கள் மேற்கு வங்கத்திற்கு வந்துள்ளீர்கள்.. நானும் இந்தியா கூட்டணியில் தானே இருக்கிறேன். குறைந்தபட்சம் என்னிடம் உங்கள் பயணம் குறித்துச் சொல்லி இருக்கலாமே.. எனக்கு அரசு இயந்திரம் மூலமாகவே தெரிய வந்தது.

தைரியம் இருந்தால்: உங்களுக்குத் தைரியம் இருந்தால் வாரணாசியில் பாஜகவைத் தோற்கடிக்கவும். முன்பு வென்ற இடங்களிலும் நீங்கள் தோற்றுப் போவீர்கள். எங்கள் கட்சி உத்தரப் பிரதேசத்தில் இல்லை, நீங்கள் தானே அங்கே இருப்பதாகச் சொல்கிறீர்கள். முடிந்தால் தோற்கடித்துக் காட்டுங்கள்..

நீங்கள் இந்த முறை (சட்டசபைத் தேர்தலில்) ராஜஸ்தானில் கூட ஜெயிக்கவில்லை. போய் அந்த இடங்களை முதலில் வெல்லுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள், வாரணாசியில் வெற்றி பெறுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமான கட்சி என்று அப்போது பார்க்கலாம்" என்று அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.

ராகுல் மீது பாய்ச்சல்: தொடர்ந்து ராகுல் காந்தியின் பாத யாத்திரை குறித்துப் பேசிய அவர், "இப்போது இங்கே ஒரு புதிய ஸ்டைல் ​​உருவாகியுள்ளது. அதாவது போட்டோ ஷூட் ஸ்டைல்.. இதுவரை டீக்கடைக்கு கூடப் போகாதவர்கள் இப்போது பீடித் தொழிலாளிகளுடன் அமர்ந்து பீடி சுற்றுகிறார்கள். இதெல்லாம் மக்களுக்குத் தெரியாமல் ஒன்றும் இல்லை" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து இருந்தது. அதில் ராகுல் காந்தி பீடி சுற்றும் தொழிலாளர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களின் வருவாய் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர் உரையாடுவது அதில் தெரிகிறது. இதைக் குறிப்பிட்டே மம்தா பானர்ஜி ராகுல் காந்தியைச் சாடியுள்ளார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்த சில நாட்களில் இப்போது காங்கிரஸ் மீதான கடுமையாக விமர்சனத்தை ஆரம்பித்துள்ளார்.

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்: காங்கிரஸ் திரிணாமுல் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்களை மட்டுமே வழங்க முடியும் எனக் கூறிவிட்டார். கடந்த 2019 லோக்சபாதேர்தல் மற்றும் 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்கு வங்கி அடிப்படையில் இரண்டு இடங்களை மட்டுமே தர முடியும் என்று கூறி காங்கிரஸ் கேட்ட இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் தர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+