பாஜகவின் மற்றொரு கோட்டையை காலி செய்யும் காங்கிரஸ்.. வெற்றி உறுதியாம்.. புது சர்வே முடிவுகள்
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பான புது கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்தது.

இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதைப் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள இந்த வெற்றி உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஹரியானா தேர்தல்: இதற்கிடையே அடுத்தாண்டு நடக்கும் ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஹரியானா என்பது சின்ன மாநிலமாக இருந்தாலும், அது டெல்லிக்கு மிக அருகில் இருப்பதாலும், இந்தி ஹார்ட் லேண்ட்களில் ஒன்றாக இருப்பதாலும் அது ரொம்ப முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அங்கே தேர்தல்களிலும் கடும் போட்டியே நிலவுகிறது.
"தீபாவளி பரிசு.."ஊழியர்களுக்கு டாடா பஞ்ச் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய நிறுவனம்!
இதற்கிடையே ஹரியானா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் குறித்த முதற்கட்ட சர்வேயை இப்போது ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பெரும்பான்மையைப் பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 46 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவுகிறது. இது தவிர ஜனநாயக ஜனதா கட்சி, இந்தியத் தேசிய லோக் தள் ஆகிய கட்சிகளும் இப்போது களத்தில் உள்ளன.
புது சர்வே: ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ள சர்வேயில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 48 முதல் 50 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக 31 முதல் 33 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2014இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், 2019இல் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சூழலில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் என்ன நிலைமை: கடந்த 2019இல் நடந்த தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதில் பாஜக 40 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. அதன் பிறகு பாஜக ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்த முறை தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையிலேயே பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் பூபிந்தர் சிங் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஹரியானாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் மனநிலையைக் காங்கிரஸ் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications