அழிக்கவே முடியாது.. திமிறி எழும் காங்..! ஆளும் பாஜக, மம்தா கட்சியை வீழ்த்தி ஷாக் கொடுத்த ‛கை’.. ஆஹா
டெல்லி: தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, மகாராஷ்டிராவில் 2 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதி உள்பட மொத்தம் 5 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் எங்களை அழிக்கவே முடியாது. நாங்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம் என்பதை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாஜக மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன.
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. நாகலாந்தில் என்டிபிபி பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்த நிலையில் மேகாலாயாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது.
இதேபோல் பிப்ரவரி 27ல் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி, மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாட், கஸ்பா பெத், ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திமிறி எழும் காங்கிரஸ்
இந்த முடிவு என்பது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறிய பாஜகவினருக்கு நேற்றைய இடைத்தேர்தல் முடிவுகள் என்பது அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளன. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை போல் மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆளும் கட்சிகளை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் கூட செல்வாக்கு உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. எங்கெங்கு காங்கிரஸ் வாகை சூடி ஆளும் கட்சிக்கு ஷாக் அளித்தது என்ற விபரம் வருமாறு:

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வெற்றி
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவர் 1,10,556 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியோடு களமிறங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியடைந்தார். இதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‛‛இது தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கவில்லை. மகனை பறிகொடுத்த அனுதாபம் உள்ளிட்ட காரணிகளால் தான் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்'' என கூறியிருந்தார். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். இதனால் தான் அனுதாபம் என்பதை அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

மேற்கு வங்கத்தில் வென்ற காங்கிரஸ்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் சாகர்திகி தொகுதிக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடதுசாரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் பைரோன் பிஸ்வாஸை வேட்பாளராக களமிறக்கியது. நேற்றைய ஓட்டு எண்ணிக்கையின்போது பைரோன் பிஸ்வாஸ் 22,986 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 87, 667 ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தெபாசீஷ் பானர்ஜி 64,681 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு முதல் எம்எல்ஏ கிடைத்துள்ளது. அதோடு மட்டுமின்றி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து வென்றது என்பது காங்கிரஸ் கட்சியினருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் திலிப் சாகா 25,815 ஓட்டுகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மகாராஷ்டிராவில் வென்ற காங்கிரஸ்
அதேபோல் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கஸ்பா பெத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த முக்தா திலக் மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதி கடந்த 28 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்தது. இது பாஜகவின் கோட்டையாகும். ஆனால் நேற்றைய ரிசல்ட் என்பது முற்றிலுமாக மாறி பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் 73,194 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் ஹேமந்த் ரசானே 62,244 ஒட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றி பெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு நேற்று எண்ணப்பட்ட 3 சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வாகைசூடிய பாஜக
அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாடா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த லட்சுமண ஜக்தாப் மரணமடைந்தார். இதனால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அஸ்வினி லட்சுமண் ஜக்தாப் 1 லட்சத்து 5 ஆயிரத்து 138 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்த தொகுதியை பாஜக தக்க வைத்துள்ளார். இந்த தொகுதியில் களமிறங்கிய சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நானா கடே 81,831 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தொகுதியில் நானா கடேவுக்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆதரவு இருந்தாலும் இங்கு பாஜக மீண்டும் வெற்றியை பெற்றுள்ளது.

ஜார்கண்ட்டில் பாஜக ஆதரவாளர் வெற்றி
அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் தொகுதியில இடைத்தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ஏஜெஎஸ்யு கட்சி வேட்பாளர் சுனிதா சவுத்ரா வெற்றி பெற்றார். இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் இடைத்தேர்தல் நடந்தது. ராம்நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பஜ்ரங் மோத்தா 21,970 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பாஜக ஆதரவு வெற்றி ஏஜெஎஸ்யு கட்சியின் வேட்பாளரான சுனிதா சவுத்ரா 1 லட்சத்த 15 ஆயிரத்த 669 வாக்குகள் பெற்ற நிலையில் காங்கிரஸின் பஜ்ரங் மேத்தா 93,699 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!










Click it and Unblock the Notifications