நெருங்கும் 5 மாநில தேர்தல்! அடுத்த வரும் லோக்சபா தேர்தல்! அக்.9ல் சக்கர வியூகம் வகுக்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விரைவில் 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் நடத்துவதற்கான தேதி வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

congress-working-committee-meeting-to-be-held-on-october-9

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 9ம் தேதி கூடுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காரிய கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 39 பேர் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்த விவாதிக்க உள்ளனர். மேலும் தற்போது மாநில வாரியாக உள்ள அரசியல் சூழல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயங்கள் பற்றியும் ஆலோசனைகள் மேற்கொ்ளப்படலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+