விவசாயிகளுடனான பேச்சவார்த்தை திருப்தி.. 2 கோரிக்கைளில் ஒருமித்த முடிவு.. வேளாண் அமைச்சர் பேட்டி
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 4 கோரிக்கையில் 2 கோரிக்கைகளில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு போராடுகிறார்கள்,

மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்ட பெரிய விவசாய சீர்திருத்தம் என்கிறது. ஆனால் புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை இல்லாமல் செய்வதுடன். மண்டி முறையை பலவீனப்படுத்தும் என்றும், இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். எனவே சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக மத்திய அரசை எச்சரித்து வருகிறார்கள்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இன்று மத்திய அரசு ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் எம்.எஸ்.பி மீதான சட்ட உத்தரவாதம் குறித்து மட்டுமே விவாதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பேச்சுவார்ததையில் விவசாய அமைப்புகள் வேளாண் அமைச்சர் தோமருடன் பங்கேற்றன,.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது.
விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications