1 லட்சம் வாக்கு வித்தியாசம்.. திகார் சிறையில் இருந்தே உமர் அப்துல்லாவை தோற்கடித்த ரஷித்.. யார் இவர்
டெல்லி: சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் கைதாகி 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ரஷித், லோக்சபா தேர்தலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளில் ஸ்டார் வேட்பாளர்கள் பலரும் தோல்வியை சந்தித்து உள்ளனர். அதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ஒருவர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட உமர் அப்துல்லா, சுயேச்சையாக போட்டியிட்ட என்ஜினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத்திடம் தோல்வி அடைந்துள்ளார். உமர் அப்துல்லாவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
சுயேச்சையாக போட்டியிடுவது இன்றி தற்போது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே சுயேச்சையாக போட்டியிட்ட அபதுல் ரஷித் , உமர் அப்துல்லாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வியக்க வைத்து இருக்கிறார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ரஷீத் அங்கிருந்த படியே போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் சிறையில் இருப்பதால் ரஷீத்தின் மகன்கள் பிரசாரத்தை முன்னெடுத்தனர்
அவரது இரண்டு மகன்களும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். சிறையில் இருந்தபடியே தற்போது வெற்றியையும் ருசித்துள்ளார். இவர், வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
ஷேக் அப்துல் ரஷித் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேலாக முன்னிலையில் உள்ள நிலையில் உமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், உமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:- "தவிர்க்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் என நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற ரஷீத்துக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார் .
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் கதூர் ஷாகிப் தொகுதியில் திகார் சிறையில் இருந்த படியே வெற்றி பெற்றுள்ளார் அம்ரித் பால் சிங். காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட அம்ரித் பால் சிங் சுயேட்சையாக போட்டியிட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைதான அமிரித் பால் சிங் தற்போது திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக குல்பிர் சிங் ஜிரா, ஆம் ஆத்மி கட்சியில் லால்ஜித் சிங் புல்லார், பாஜகவில் மன் ஜித் சிங் மன்னா மியான்விண்ட் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதில், அம்ரித் பால் சிங் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங்கை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications