ஒரே வாரத்தில் இந்தியாவில் 4 மடங்கு அதிகரித்த கொரோனா.. மீண்டும் ஊரடங்கு & மாஸ்க் கட்டுப்பாடு வருமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது மத்திய அரசின் டேட்டாவில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2019ல் பரவிய கொரோனா நம்மை அலை அலையாகத் தாக்கியது. கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்குப் பிறகு நாம் கொரோனாவை ஒழித்தோம். அதேநேரம் இன்னுமே கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை.

இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவில் சில பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து இப்போது இந்தியாவிலும் கடந்த சில காலமாகவே கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.
4 மடங்கு அதிகரித்த பாதிப்பு
குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 752 பேருக்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் நாட்டில் கொரோனா கேஸ்கள் 248ஆக மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஒரே வாரத்தில் வைரஸ் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்து 1000ஐ தொட்டுள்ளது. குறிப்பாகக் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்கே பாதிப்பு?
அதிகபட்சமாக கேரளாவில் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 430ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் முறையே 153 மற்றும் 99 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மகாராஷ்டிராவில் 209 பேர் பேரும் டெல்லியில் 104 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து குஜராத்தில் 83 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் 47 கேஸ்களும், உத்தர பிரதேசத்தில் 15 கேஸ்களும் பதிவாகியுள்ளன. அதேபோல மேற்கு வங்கத்தில் 12 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.
புதிய வகை கொரோனா
இந்தியாவில் இப்போது பல்வேறு பகுதிகளிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நமது நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய இரு புதிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகைகளையும் உலக சுகாதார அமைப்பு கண்காணிக்கும் பட்டியலில் வைத்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் வகை அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
மத்திய சுகாதார செயலாளர்
மத்திய சுகாதார செயலாளர் கடந்த சனிக்கிழமை நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களின் நிலைமையை ஆய்வு செய்தார். பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து தான் வைரஸ் கேஸ்கள் அதிகம் பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பெரும்பாலான கேஸ்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள் வருமா?
அதேநேரம் இந்த புதிய வகை கொரோனாவால் பெரிதாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போடவும் அறிவுறுத்துகிறார்கள். அதேநேரம் அரசு தரப்பில் தடுப்பூசி குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், மாஸ்க் & ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் இப்போது வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications