உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது
டெல்லி: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது. அதாவது 9.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் பெரும் யுத்தம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது.

அதாவது 9,35,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,93 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 47,192 ஆக உயர்ந்துள்ளது. அது போல் அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அது போல் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்படடோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
ஒரே நாளில் புதிதாக 8,195 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,04,118 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 1,10,574, சீனாவில் 81,554, ஜெர்மனி- 77,891, பிரான்ஸ் - 56,989 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications