மீண்டும் மிரட்டும் கொரோனா.. டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிப்பு.. நாடு முழுவதும் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா, உருமாறிய கொரோனா என அடுத்தடுத்து மக்களை பீதிக்குள்ளாக்கியது. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகின. கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்தே பலரும் இன்னும் மீண்டு வரவில்லை.

Corona india delhi

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கேஸ்கள் அதிகரித்து வந்தன. அதைத்தொடர்ந்து, தற்போது கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 752 பேர் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 248 கேஸ்கள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 1,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கோவிட்-19 தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 99 வழக்குகள் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன. அதேபோல, கேரள மாநிலத்தில் 430 பேரும், மகாராஷ்டிரத்தில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், குஜராத்தில் 83 பேரும், கர்நாடகத்தில் 47 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 15 பேரும், மேற்கு வங்காளத்தில் 12 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கொரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேரும், கேரள மாநிலத்தில் இரண்டு பேரும், கர்நாடகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிதாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும்பட்சத்தில் அவர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு தரப்பில் அவ்வாறு எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இந்த கொரோனா தொற்றால் முகக்கவசம், ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+