மிரட்டும் கொரோனா.. மிரளும் சிங்கப்பூர், ஹாங்காங்.. இந்தியாவுக்கு எச்சரிக்கையா?
டெல்லி: சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு பதிவாக தொடங்கியுள்ளது. இது மீண்டும் மருத்துவ அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துமா.. மக்கள் கவலையடையும் நிலையில் கள நிலவரம் உள்ளதா என்பது பற்றிய செய்தி தொகுப்பு.
கொரோனா வைரஸின் கோர தாண்டவம் மனித குலத்துக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலகையே புரட்டிப் போட்டது. உயிரிழப்புகள், தீவிர சிகிச்சைகள் ஒருபக்கம், உலகமே முடங்கி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது மறுபக்கம். அதன் பாதிப்புகள் இப்போதுவரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆங்காங்கே மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. அதிலும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு பதிவாக தொடங்கியுள்ளது. இது மக்களிடையே அச்சதை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இந்திய சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் குறித்து அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் நிலவி வரும் மோசமான சூழ்நிலையே இந்த பதற்றத்துக்கு காரணமாக உள்ளது.
SARS-CoV-2 வைரஸ் காரணமாக கொரோனா தொற்று ஏற்படுவதாக அந்த நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்று அந்த நாடுகளின் சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மிகவும் வேகமாக பரவுவது தான் கவலைக்குரிய செய்தியாக உள்ளது.
சிங்கப்பூர் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஏப்ரல் 27 முதல் மே 3 ஆம் தேதி வரையில் சுமார் 14,200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தில் 11,000 ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 102இல் இருந்து 133 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சராசரியாக 3 இல் இருந்து 2 ஆக குறைந்துள்ளது." என்று கூறப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து வரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஹாங்காங் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "SARS-CoV-2 வைரஸ்க்கு பாசிட்டிவ் ஆகும் சராசரி 6.21 1சதவீதத்தில் (ஏப்ரல் 6-12) இருந்து 13.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் இரண்டாவது வாரம் நிறைவில் இருந்தே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. கடந்த கால புள்ளி விபரங்களுடன் ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளது." என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையாக உள்ளது.
மார்ச் 19 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது. நம் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான எண்ணிக்கை தான். மேலும் தொற்றின் தாக்கமும் அதிகமாக இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக் கூட இல்லை என்று சுகாதாரத்துறை கூறுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், "நிலைமையை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கவலைப்பட வேண்டியதில்லை. சிங்கப்பூர், ஹாங்காங்கிலுமே குறைவான பாதிப்பு தான் ஏற்படுகிறது. நோய் தீவிரமாகவோ, உயிரிழப்பை ஏற்படும் அளவிலோ இல்லை." என்கின்றனர்.
"இதற்கு முன்பு பரவிய கொரோனாவுடன் ஒப்பிடும்போது இதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கொரோனா தொற்று ஏற்கனவே பரவாகிவிட்டது. அதிகளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் மரணம் போன்றவை குறித்து ஆதாரபூர்வமான தகவல் இல்லை என்பதால் கவலைப்பட வேண்டாம். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி விடுதல், சுகாதாரம் பேணுதல் போன்ற நடவடிக்கைகளே போதுமானது." என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications