அதிகரிக்கும் மாரடைப்பு! சரியும் இளைஞர்கள்.. காரணம் கொரோனா தடுப்பூசியா! மத்திய அரசு பரபர விளக்கம்
இந்தியாவில் சமீப காலங்களில் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு அதிகரித்துள்ளது.
டெல்லி: மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்பது போன்ற தகவல்கள் பரவின. இதற்கிடையே இது குறித்து மத்திய சுகாதார துறை நாடாளுமன்றத்திலேயே விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் ஏற்படும் திடீர் மாரடைப்பு வேகமாக அதிகரித்துள்ளது. முன்பு முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரை இழக்கிறார்கள். இதற்கிடையே மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்பது போன்ற தகவல்கள் பரவின.

நாடாளுமன்றம்
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தியாவில் மாரடைப்பு வழக்குகள் அதிகரித்துள்ளதா என்று மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பியிருந்தார்.

தடுப்பூசி காரணமா
ராஜூ ரஞ்சன் சிங் என்ற எம்பி கேட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில், திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது. திடீர் மாரடைப்பிற்குத் தடுப்பூசி காரணம் என்பதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகளவு மாரடைப்பு ஏற்படுவது பற்றி தரவுகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தரவுகள் இல்லை
மேலும், மாரடைப்பு குறித்து எந்தவொரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை என்றும் இது குறித்து எந்தவொரு டேட்டாவும் இல்லை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய காலத்தில், உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்ததது. உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்துப் பரவிய தகவல்களுக்கு மத்திய அரசே விளக்கமளித்துள்ளது.

அதிகரிக்கும் மாரடைப்பு
கடந்த சில காலமாகவே இளைஞர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. கடந்த மாதம் 38 வயதான ஒருவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதற்கு முன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதேபோல கடந்த பிப். 23ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பு காரணமாகப் பலியானார்.

உயிரிழப்பு
மேலும், கடந்த பிப். 24ஆம் தேதி ஹைதராபாத்தில் பஸ்ஸை பிடிக்கக் காத்திருந்த ஒருவர் திடீரென நெஞ்சு வலியால் அப்படியே சரிந்தார். நல்ல வாய்ப்பாக அந்த நபருக்கு அருகே இருந்த போலீசார் உரிய நேரத்தில் முதலுதவி கொடுத்து காப்பாற்றினார். அதேபோல மகாராஷ்டிராவிலும் திருமண விழாவில் நடமாடிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி நாடு முழுக்க பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் மத்திய அரசு இந்த முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

வேக்சின் பணிகள்
கொரோனா 2020இல் இந்தியாவில் பரவிய நிலையில், 2021ஆம் ஆண்டு ஜன. முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள். முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா வேக்சின் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதியவர்கள், இணை நோயாளிகள் என்று படிப்படியாக வேக்சின் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் உள்ளிட்ட பல வேக்சின்களுக்கு அனுமதி தரப்பட்ட போதிலும் பெரும்பாலும் கோவாக்சின், கோவிஷீல்ட் மூலமே வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications