கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் தீவிரம் - 12.77 கோடி பேர் பாதிப்பு 27 லட்சம் பேர் மரணம்
கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. மீண்டும் லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி: உலக அளவில் 4,72,395 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,77,47,632 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலக அளவில் 10,29,34,314 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,506 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பேர் மொத்தம் 27,95,585 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது. தினசரியும் கொத்துக்கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரை குடித்து வருகிறது கொரோனா.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தினசரியும் மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 40,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,57,785 பேராக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவிற்கு ஒரே நாளில் 472 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவிற்கு 5,62,488 பேர் மரணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து 2,34,09,102 பேர் குணமடைந்துள்ளனர்
பிரேசிலில் ஒரே நாளில் 44,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,53,4,688 பேராக உயர்ந்துள்ளது. 1,605 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனாவால் மொத்தம் 3,12,299 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 68,206 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1,20,39,210 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,13,53,727 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 295 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். மொத்தம் 161,881 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications