Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் ஒமிக்ரானால் தீவிரமாய் பரவும் தொற்று.. 1.94 லட்சம் பேர் புதிதாக பாதிப்பு.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 60,405 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.. கடந்த ஒரு வாரமாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கை பதிவு செய்யப்படுகின்றன.

இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கினாலும், தடுப்பூசிகளை செலுத்துவதில் முனைப்பு காட்டினாலும் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

 இந்தியா

இந்தியா

இந்தியாவில் கொரோனா ஒருபக்கம், ஒமிக்ரான் இன்னொரு பக்கம் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.. சில மாதங்களாக குறைந்திருந்த தொற்று, சமீப காலமாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த இன்றைய அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது..

 தொற்று உறுதி

தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. கொரோனா பாதிப்பில் இருந்து 60,405 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர்... நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,55,319 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று கூறியுள்ளது... அதாவது நாடு முழுவதும் 1.94 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இது நேற்றைய பாதிப்பை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

இதுவரை 3,45,70,131 பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும், மொத்த உயிரிழப்பு 4,84,213 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. அதேபோல, ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், நாடு முழுவதும் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... 1,805 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. 3063 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,281 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும், டெல்லியில் 546 பேரும் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 எண்ணிக்கை

எண்ணிக்கை

குறிப்பாக, இந்தியாவில் தொற்று பாதிப்பானது 40 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 78 சதவீதம் அளவுக்கு பரவிவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் தொற்று விகிதமானது (R-VALUE) அதிகரித்துள்ளதான்... கடந்த டிசம்பர் 2ம் தேதி தொற்று பரவல் விகிதமான 0.95 ஆக இருந்த நிலையில், ஜனவரி 10ம்தேதி 1.64 ஆக உயர்ந்துவிட்டது..

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
    பரவல்

    பரவல்

    தமிழகம் உட்பட கிட்டத்தட்ட 17 மாநிலங்களில் இந்த தொற்று விகித பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை கவலை தெரிவிக்கிறது.. இதையடுத்து, நாடு முழுவதும் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் ஆரம்பமாகி உள்ளது... ஓமிக்ரான் தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தும் அறிகுறியை காட்டினாலும், மற்ற நாடுகளில் உள்ளதைப்போல இது பெரும்பாலும் லேசான தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது என்று வல்லுநகர்கள் தொடர்ந்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+