மிக மோசமான நாள்.. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உலக அளவில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் பலியாகி இருக்கிறார்கள். 12,262 பேர் மொத்தமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 1,60,519 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தமாக 1,94,438 பேர் குணமடைந்து உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 1,16,752 ஆக உயர்வு. அங்கு நேற்று மட்டும் 3307 கேஸ்கள் பதிவானது. அங்கு பலி எண்ணிக்கை 5651 ஆக உள்ளது.
தமிழகத்திலும் நேற்று அதிகமாக கேஸ்கள் பதிவானது. தமிழகத்தில் நேற்று 2174 கேஸ்கள் பதிவானது. மொத்தமாக நேற்று 50193 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது,.
டெல்லியில் நேற்று மட்டும் 2414 கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளது. அங்கு மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 47102 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்தமாக இதுவரை 1904 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக 1561 பேர் பலியாகி உள்ளனர். அங்கு நேற்று புதிதாக 520 கேஸ்கள் பதிவானது. மொத்தமாக அங்கு 25148 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
Recommended Video
நாடு முழுக்க நேற்று அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா சோதனைகள் செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் கூட நாடு முழுக்க நேற்று அதிக கேஸ்கள் வந்து இருக்கலாம் என்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications