ஒரே நாளில் 18,000 + கொரோனா கேஸ்கள்.. இந்தியாவில் மோசமாகும் நிலைமை.. ஷாக்கிங் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது. வெறும் 4 நாட்களில் இந்தியாவில் 1 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இன்னும் 20 நாட்களில் இந்தியா 10 லட்சம் கேஸ்களை தொடும் என்று கூறுகிறார்கள். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 381 பேர் பலியாகி உள்ளனர்.

Coronavirus: 18000 plus cases added in 24 hours, Total cases in India reaches 509446

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 295,917 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 197,840 ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் உள்ளது. 8,944 பேர் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 5500 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக
1,52,765 பேருக்கு கொரோனா உள்ளது.

நேற்று மட்டும் 175 பேர் அங்கு பலியாகி உள்ளனர். 7106 பேர் இதுவரை மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர். டெல்லியில் புதிதாக 3460 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 77240 பேருக்கு கொரோனா உள்ளது. இதுவரை 2492 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை 74622 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் நேற்று 580 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுவரை 30158 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 1772 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+