கொரோனா: உலகில் ஒரே நாளில் 3,271 பேர் பலி.. இத்தாலியில் அதிக உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸால் உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,271 பேர் பலியாகிவிட்டனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடி வருகிறது. வெளியாட்கள் நுழைவதை தடுக்கும் விதமாக தங்கள் எல்லைகளை மூடி நோய் பரவிய மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

    Coronavirus: 3,271 death globally in a single day yesterday!

    அந்த வகையில் உலகளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,271 ஆக உள்ளது. அதில் இத்தாலியில் மட்டும் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 9,134 ஆக உள்ளது.

    அது போல் ஸ்பெயினில் 773 பேர் பலியாகிவிட்டனர். இதனால் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் நேற்று ஒரே நாளில் 401 பேர் பலியாகிவிட்டனர். இதனால் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 1,696 பேர் ஆக உயர்ந்துள்ளது.

    பிரான்ஸில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 299 ஆக இருந்தது. பலியானோரின் எண்ணிக்கை 1995ஆக உயர்ந்துள்ளது. லண்டனில் 181 பேர் உயிரிழந்துவிட்டனர். அங்கு பலியானோரின் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது. அது போல் நெதர்லாந்தில் நேற்று ஒரே நாளில் 112 பேர் பலியாகிவிட்டனர். மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.

    ஜெர்மனியில் 84 பேர் இறந்த நிலையில் மொத்தம் இறந்தோரின் எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் 69 பேர் இறந்துவிட்டனர். மொத்தம் 289 பேர் பலியாகிவிட்டனர். அது போல் ஸ்விட்சர்லாந்தில் 39 பேர் பலியாகிவிட்டனர். மொத்த எண்ணிக்கை 231 ஆக உயர்வு. ஸ்வீடனில் 28 பேர் நேற்று பலியான நிலையில் பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

    துருக்கியில் 17 பேரும், கனடாவில் 16 பேரும், போர்ச்சுகலில் 16 பேரும், பிரேசிலில் 15 பேரும், மொராக்கோவில் 12 பேரும், டென்மார்கில் 11 பேரும், டொமினியன் ரிபப்ளிக்கில் 10 பேரும், ஆஸ்திரியா , பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவில் தலா 9 பேரும், தென்கொரியாவில் 8 பேரும், ஈகுவடாரில் 7 பேரும், லக்ஷம்போர்க், எகிப்தில் 6 பேரும், சீனா, நார்வே, பனாமாவில் 5 பேரும், இஸ்ரேல், ஈராக்கில் தலா 4 பேரும், மலேஷியா, அயர்லாந்தில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+