ஒரே வாரம்.. இந்தியா முழுக்க 50% மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!
டெல்லி: இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது. கடந்த ஒரே நாளில் மட்டும் 909 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க மொத்தம் 8356 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது .
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 3500 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஒரே வாரத்தில் 8356 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுக்க 34 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

எத்தனை பேர் குணமடைந்தனர்
இதில் நல்ல செய்தி என்றால் மொத்தமாக இதுவரை நாடு முழுக்க 716 பேர் குணமாகி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 74 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1,86,906 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக தினமும் நாடு முழுக்க 15,747 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 584 பேருக்கு சராசரியாக தினமும் கொரோனா ஏற்படுகிறது.

எத்தனை மாவட்டம்
இந்தியா முழுக்க 40 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இந்த மருந்துகள் உருவாக்கப்படவில்லை. இந்த மருந்துகள் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் 718 மாவட்டங்களில் 364 மாவட்டங்கள் நாடு முழுக்க கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 50% மாவட்டங்கள் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக அதிகரிக்கும்
கடந்த மார்ச் 29 கணக்குப்படி வெறும் 160 மாவட்டங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 கணக்குப்படி 284 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை 364ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 50% மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

அதிகமாக உத்தர பிரதேசம்
அதிகமாக உத்தர பிரதேசத்தில் நிறைய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 40 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 33 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 27 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் தற்போது வரை 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications