ஆட்டத்தை தொடங்கிய கொரோனா.. இந்தியாவில் ஒரே நாளில் 157 பேர் பலி.. 5242 பேர் பாதிப்பு.. மக்கள் கலக்கம்

ஒரே நாளில் 5242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கியது கொரோனா.. வெறும் 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது... இது இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவு என்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

3 லாக்டவுன் முடிந்து, 4வது லாக்டவுன் அமலாகி உள்ளது.. ஏகப்பட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. தளர்வுகள் ஒருபக்கம் அதிகமானாலும், அதைவிட அதிகமாக தொற்று பாதிப்புகள் அதிகமாகி வருவது அதிர்ச்சியை அளித்து வருகிறது.

coronavirus: 5242 corona cases in india in 24 hours

தொற்று எண்ணிக்கை குறையாததால்தான், இந்த 4-வது லாக்டவுன் என்றாலும், 55 நாட்களை கடந்தும் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை.. தற்போது, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, 24 மணி நேரத்தில் மட்டும் 5242 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதுவரை இல்லாத உயர்வாகும்.. இந்த எண்ணிக்கை இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பால் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.. இன்றைய நிலைப்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆகும்... 36824 பேர் குணமடைந்துள்ளனர்.. 3029 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதில் உச்சத்தில் உள்ளது மஹாராஷ்டிரா மாநிலம்தான்.. 33,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதேபோல, குஜராத்தில் 11,379 பேரும், தமிழகத்தில் 11,224 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. டெல்லி - 10,054, ராஜஸ்தான் மாநிலம் 5,202, மத்திய பிரதேசம் 4,977 பேரும், உத்திரபிரதேசத்தில் 4,259 பேரும் மேற்கு வங்கத்தில் 2,677 பேரும் என ஒவ்வொரு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த 4வது லாக்டவுனிலாவது இந்த பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமும்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+