கொரோனா: தனிமைப்படுத்தலுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் பாஜக எம்பி துஷ்யந்த் சிங்!
டெல்லி: கொரோனா தொற்று பாதித்துள்ள பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பார்ட்டியில் பங்கேற்ற நிலையில் பாஜக எம்.பி. துஷ்யந்த்சிங், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றிருக்கிறார்; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காலை விருந்தில் சந்தித்தும் பேசியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா, லக்னோவில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பார்ட்டியில் பங்கேற்ற வசுந்தரராஜே சிந்தியா, மகன் துஷ்யந்த் சிங் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் துஷ்யந்த்சிங், கனிகா கபூரின் பார்ட்டியை முடித்த கையோடு டெல்லி சென்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றிருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எம்.பி.க்களுக்கு அளித்த காலை விருந்திலும் பங்கேற்றிருக்கிறார். பின்னர் குரூப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இதன் பின்னர்தான் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் துஷ்யந்த்சிங். தற்போது துஷ்யந்த் சந்தித்த எம்.பிக்களான, டெரெக் ஓ பிரெய்ன், வருண் காந்தி, அனுப்ரியா பட்டேல் ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார்












Click it and Unblock the Notifications