இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது- உயிரிழப்பு 1,693

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குவதாக covid19india.org புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711. கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1,583.

Coronavirus case: India to cross 50,000

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13161. அதேநேரத்தில் covid19india.org புள்ளி விவரங்கள், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குவதாக தெரிவித்துள்ளது.

அதன் புள்ளி விவரங்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,400 என்கிறது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,693 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,142 என்கிறது covid19india.org புள்ளி விவரம். மேலும் மகாரஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்து 15,525 ஆக அதிகரித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 617 ஆக உயர்ந்திருக்கிறது. 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. இங்கு மொத்தம் 6,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 368 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்கிறது இப்புள்ளி விவரம்.

டெல்லியில் 5,104 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்; 4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 4058 பேரும் 5-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 3158 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது covid19india.org.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+