ரஷ்யா, துருக்கியில் அதிகரிக்கும் பாதிப்பு.. உலகம் முழுக்க 4,969,677 பேர் கொரோனாவிற்கு பலி.. பின்னணி
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 320,623 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 244,785,830 பேர் இதுவரை உலக அளவில் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
உலகம் முழுக்க 4,969,677 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,109 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை பரவல் தொடங்கி உள்ளது.
பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா கேஸ்கள் பரவுவதால் வேக்சின் போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக சீனா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

அமெரிக்கா
அமெரிக்காவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரித்து உள்ளது. ஒரு வாரமாக அங்கு 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவானது. தற்போது அங்கு புதிதாக 41,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 46,400,879 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 757,660 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 403 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 36,256,864 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,386,355 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் இன்னும் கொரோனா பரவல் குறையவில்லை. பிரிட்டனில் 8,809,774 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 36,567 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 139,571 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,172,091 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,498,112 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் மூன்றாம் அலை பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு தினமும் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பரவி வருகின்றன. 7,879,468 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 27,663 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 69,344 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 232 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,314,812 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 495,312 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,201,357 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 11873 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 455,100 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,575,623 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 170,634 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் இன்னும் மூன்றாம் பரவல் பாதிப்பு குறையவில்லை. ரஷ்யாவில் 8,279,573 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 37930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 231,669 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1069 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,186,611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 861,293 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் 21,735,560 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 5797 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 605,884 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,922,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 207,043 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications