அமெரிக்காவில் திடீரென அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 69,518 பேர் பாதிப்பு.. பல நாடுகளில் 3ம் அலை!
டெல்லி: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 4,978,191 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 7,475 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
உலக அளவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. முக்கியமாக A.Y.4 போன்ற புதிய வகை கொரோனா பரவுகின்ற காரணத்தால் கொரோனா கேஸ்கள் பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் 423,837 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 245,256,304 பேர் உலக அளவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு தினசரி பாதிப்பு சட்டென இரண்டு நாட்களாக உயர்ந்து உள்ளது. தற்போது அங்கு புதிதாக 69,518 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 46,497,603 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 759,930 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1449 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 36,374,748 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,362,925 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் நேற்று வரை 5 ஆயிரம் வரை கொரோனா கேஸ்கள் பதிவான நிலையில் தற்போது திடீரென 13 ஆயிரம் வரை கொரோனா கேஸ்கள் பதிவாக தொடங்கி உள்ளது. பிரேசிலில் 21,748,984 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 13,424 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 606,293 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 20,944,087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 198,604 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
ஆனால் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உயரவில்லை. இந்தியாவில் தொடர்ந்து 11-14 ஆயிரம் இடையில்தான் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,214,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 13,508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 455,684 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,589,672 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 169,509 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் 8,853,227 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 40,954 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு இதுவரை 139,834 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 263 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,198,408 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,514,985 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் தினமும் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பரவி வருகின்றன. 7,909,111 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29,663 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 69,559 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,346,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் 493,273 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ரஷ்யாவில் 8,316,019 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 36,446 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 232,775 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1106 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,213,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 869,660பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications