டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. வர்த்தகத்தில் பாதிப்பா?.. குழப்பமா?.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்படும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், புகார்களை விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்படும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், புகார்களை விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    EXCLUSIVE: நீங்க கொடுக்கற நிவாரணம் சரியா போய்சேராது.. கஸ்தூரி கவலை

    கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பங்கு சந்தைகள் மோசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் உற்பத்தி துறைகள் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது.

    Coronavirus: Centres control room will help you on the transportation and delivery of goods

    கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்படும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் குறித்து விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை சார்பாக இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஊரடங்கு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் மக்களிடம் வழங்குதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை சாதாரண மனிதர்களுக்கு வழங்குதல் மிகப்பெரிய கஷ்டமாக மாறியுள்ளது. இதனால் நாடு முழுக்க பங்குதாரர்கள் பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

    இதனால் நாடு முழுக்க உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், மொத்த விற்பனையாளர் அல்லது ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விநியோகிப்பதில், உற்பத்தி செய்வதில் சிரமங்களை அனுபவித்து வருகிறது.

    நிறுவனங்கள் இது போன்ற சிரமங்களை எதிர்கொண்டால், பின்வரும் தொலைபேசி எண் / மின்னஞ்சலில் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம். உடனடியாக இதன் மூலம் மக்கள் உதவிகளை பெற முடியும்.

    போன்: + 91 11 23062487

    இ - மெயில்: [email protected]

    தொலைபேசி எண் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மக்களின் புகார்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசு, மாவட்ட மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

    English summary
    Coronavirus: Centre's control room will help you on the transportation and delivery of goods in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X