விஜய்க்கு ஆதரவு அளித்த திருமாவளவன்! நிபந்தனையற்ற ஆதரவு என்றால் என்ன? தலை மேல் தொங்கும் கத்தி!
சென்னை: விஜய் முதலமைச்சராக விசிக தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. முன்னதாக நேற்று இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இடதுசாரிகள் மற்றும் விசிக நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பதாக கூறியிருக்கிறது. என்னதான் இக்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் நிபந்தனையற்ற ஆதரவு என்பது எப்போது இருந்தாலும் தலைக்கு மேல் தொங்கும் கத்திதான் என்று விஜய்யை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அரசியலில் நிபந்தனையற்ற ஆதரவு என்பது ஒரு கட்சி அல்லது கூட்டணி, மற்றொரு கட்சி ஆட்சி அமைக்க எந்தவிதமான முன் நிபந்தனைகளும் அல்லது கைமாறு எதிர்பார்ப்புகளும் இன்றி வழங்கும் ஆதரவாகும்.

நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் கட்சி, அமைச்சரவையில் இடம், துணை முதலமைச்சர் பதவி அல்லது வாரியத் தலைவர் பதவிகள் போன்ற எதையும் கோரமாட்டார்கள். இவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.
பெரும்பாலும் இத்தகைய ஆதரவு அளிக்கும் கட்சிகள் அமைச்சரவையில் சேரமாட்டார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும்போது மட்டும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அரசின் அன்றாட முடிவுகளில் இவர்கள் நேரடியாகத் தலையிட முடியாது.
மாநிலத்தில் மீண்டும் தேர்தல் வருவதைத் தவிர்க்கவும், ஆளுநர் ஆட்சியைத் தடுக்கவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும். அதேபோல தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, குறைந்தபட்ச உடன்பாடு உள்ள ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள்.
விஜய் விஷயத்தில் இடதுசாரிகள் ஆதரவு அளிக்க முக்கிய காரணம், மதவாத சக்திகளின் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சொல்லி ஆதரவளித்திருக்கின்றனர்.
இந்த ஆதரவு நிபந்தனையற்றது என்று சொல்லப்பட்டாலும், ஆதரவு அளிக்கும் கட்சி எப்போது வேண்டுமானாலும் தனது ஆதரவை வாபஸ் பெறலாம். அப்படி நிகழ்ந்தால் ஆட்சி கவிழும் அபாயம் உண்டு. எனவேதான் நிபந்தனையற்ற ஆதரவு என்பது தலைமேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.
இடதுசாரி கட்சிகள் (CPI & CPM) மற்றும் விசிக: விஜய்யின் தவெக-விற்கு "நிபந்தனையற்ற ஆதரவு" அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளன. அதாவது, அவர்கள் பதவி எதையும் எதிர்பார்க்கவில்லை, ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவே இந்த முடிவு எனத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்: இவர்கள் நிபந்தனை அடிப்படையில் ஆதரவு கோருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதாவது, இவர்களுக்குத் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்பது நிபந்தனை.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!











Click it and Unblock the Notifications