உலகிலேயே டெல்லியில்தான் மிக மோசம்.. கொரோனா பாதிப்பில் அதிர வைத்த தலைநகர்.. ஷாக்கிங் டேட்டா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகில் இருக்கும் பெரு நகரங்களில் டெல்லியில்தான் இந்த நவம்பர் மாதம் முழுக்க அதிக அளவில் தினசரி கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. உலகில் இருக்கும் மற்ற பெரு நகரங்களை விட டெல்லியில்தான் தினசரி கேஸ்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை உலகம் முழுக்க பல பகுதிகளில் ஏற்பட தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. அதேபோல் பிரேசில் போன்ற நாடுகளிலும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு தொடங்கிவிட்டது.

இந்தியாவில் டெல்லி, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் இரண்டாம் அலைக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. டெல்லியில்தான் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தினசரி கேஸ்கள்

தினசரி கேஸ்கள்

டெல்லியில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் 7000ஐ தாண்டியுள்ளது. 3000க்கும் கீழ் இருந்த தினசரி கேஸ்கள் தற்போது 7000க்கும் அதிகமாக தினமும் பதிவாகி வருகிறது. உலகில் இருக்கும் பெரு நகரங்களில் டெல்லியில்தான் இந்த நவம்பர் மாதம் முழுக்க அதிக அளவில் தினசரி கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

எப்படி ஒப்பீடூ

எப்படி ஒப்பீடூ

உலகில் இருக்கும் மற்ற பெரு நகரங்களை விட டெல்லியில்தான் தினசரி கேஸ்கள் அதிகமாக பதிவாகி உள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உலகம் முழுக்க அனைத்து பெரிய நகரங்களின் கொரோனா பாதிப்பு விவரமும் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விவரம் இதில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்த தினசரி கேஸ்களில் டெல்லி மிக மோசமான 10 நகரங்களில் ஒன்றாக உள்ளது.

எந்த நகரங்கள்

எந்த நகரங்கள்

உலக நகரங்களில் டெல்லியில்தான் தினமும் அதிக கேஸ்கள் வருகிறது. டெல்லிக்கு அடுத்தபடியாக நியூயார்க் , பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லா ஆகிய நகரங்கள் உள்ளது. ஆனால் இங்கெல்லாம் 7000+ கேஸ்கள் வருவது இல்லை. நியூயார்க்கில் 5000-5100 கேஸ்களே வருகிறது . சாவ் பாவ்லாவில் 3000-4000 கேஸ்களே வருகிறது. ஆனால் டெல்லியில் நவம்பர் 11ல் மட்டும் 8593 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

எந்த நகரமும் அருகில் வரவில்லை

எந்த நகரமும் அருகில் வரவில்லை

டெல்லியில் நவம்பர் 10 (7,830), நவம்பர் 13 (7,802) மற்றும் நவம்பர் 8 (7,745) கேஸ்கள் பதிவாகியுள்ளது. டெல்லிக்கு மிக அருகில் வேறு எந்த நகரமும் வர முடியவில்லை. செப்டம்பர் 21ம் தேதி டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுன்டியில் 10000 கேஸ்கள் வந்தது. அதுவும் கூட பழைய கேஸ்கள் திடீரென இணைக்கப்பட்டதால் வந்த கேஸ்கள் ஆகும்.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

ஆனால் டெல்லியில்தான் தினசரி கேஸ்கள் அதிகம் வருகிறது. இரண்டாம் அலை தொடங்கிய எந்த நாட்டில் இருக்கும் பெரு நகரங்களிலும் இந்த நிலை இல்லை. டெல்லியில் கடந்த ஒரு வாரத்தின் சராசரி 7,341. நியூயார்க்கில் ஒரு வார சராசரி 5,291,சாவ் பாவ்லாவில் ஒரு வார சராசரி 3,217 ஆகும். இதன் மூலம் உலகிலேயே டெல்லியில்தான் தினசரி அதிக அளவில் கேஸ்கள் பதிவாகிறது என்பது உறுதியாகி உள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கையிலும் டெல்லி மோசமாகவே இருக்கிறது. இரண்டாம் அலை இருக்கும் நாடுகள் எதிலும் டெல்லி அளவிற்கு பலி எண்ணிக்கை இல்லை. டெல்லியில் கடந்த ஒரு வாரமாக தினசரி பலி எண்ணிக்கை 87 ஆகும். மற்ற நகரங்களில் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் முதல் வேவ் சமயத்தில் நியூயார்க்கில் சராசரியாக 567 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

டெல்லியில் தற்போது 4,85,405 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 39,990 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். டெல்லியில் இதுவரை 7645 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியின் மோசமான கொரோனா பாதிப்பிற்கு அங்கு ஏற்பட்டு இருக்கும் காற்று மாசு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+