வார் ரூம்.. மாஸ் டீம்.. கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லி கையில் எடுத்த புதிய முறை.. கலக்கல் திட்டம்!

டெல்லியில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக டெல்லி அரசு புதிய முறைகளை கையாண்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக டெல்லி அரசு புதிய முறைகளை கையாண்டு வருகிறது. இதற்காக அம்மாநில அரசு பெரிய டீமை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

Recommended Video

    Corona virus : Affected toll nears 1 lakhs all over the world

    உலக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுக்க கொஞ்சம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

    விவரம் எப்படி

    விவரம் எப்படி

    இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக டெல்லி எப்படி தீவிரமாகி செயல்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு அமைப்பு எனப்படும் அரசு அமைப்புதான் இந்த வைரஸை கட்டுப்படுத்த களமிறங்கி உள்ளது. இதற்கு டாக்டர் ஷேர் சிங் கஷ்யோத்யா தலைமை பொறுப்பு வகிக்கிறார். டெல்லி முழுக்க எப்படி இந்த வைரஸ் பரவுதலை கண்காணிக்கிறார்கள் என்று இவர் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

    எத்தனை மாவட்டம்

    எத்தனை மாவட்டம்

    அதன்படி மொத்தம் 11 மாவட்டங்களில் இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு முகாம்களில் உள்ள நபர்கள் டெல்லியில் பலருக்கும் போன் செய்து வைரஸ் குறித்து சோதனைகளை செய்து வருகிறார்கள். அதேபோல் மக்கள் செய்யும் போன் கால்களுக்கு பதில் அளித்து வருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1500 பேருக்கும் அதிகமானோர் இதற்காக பணியாற்றி வருகிறார்கள்.

    முதலில் ஏர்போர்ட்

    முதலில் ஏர்போர்ட்

    இதற்காக பெரிய வார் ரூம் அமைத்துள்ளனர். அதேபோல் மிக முக்கியமாக இந்த குழு விமான நிலையங்களில் தனி சோதனை மையங்களை வைத்துள்ளது. முதலில் நோய் தாக்குதல் நடந்த நாட்டில் இருந்து வருபவர்களை மட்டுமே சோதனை செய்தனர். ஆனால் தற்போது எந்த நாடுகளில் இருந்து சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக டெல்லி விமான நிலையத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்

    தனி இடமா

    தனி இடமா

    இதுவரை டெல்லியில் மூன்று பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளனர். இந்த மூன்று பேரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மூன்று பேர் தொடர்பு கொண்ட 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அவர்களும் தனியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதே முறைதான்

    அதே முறைதான்

    கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை காண்டாக்ட் டிரேஸ் முறை என்பார்கள். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை பயன்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கேரளா இதே முறையை பயன்படுத்திதான் கொரோனாவை கட்டுப்படுத்தியது.

    தனி குழு

    தனி குழு

    இந்த பணிகளை கவனிக்க புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் தான் நோய் அறிகுறிகள் உள்ள 41 பேர் டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோல் இன்னொரு குழுவும் நோயாளிகளை கண்டுபிடித்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரியில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த எல்லோரையும் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். இவர்களின் பட்டியலை எடுத்துள்ளனர்.

    புதிய எப்படி

    புதிய எப்படி

    அவர்கள் எல்லோருக்கும் போன் செய்து உங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல், அறிகுறி, காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் 30 பேர் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்குதல் உள்ள நாட்டிற்கு சென்றவர்களை, நேரடியாக வீட்டிற்க்கே சென்று இந்த குழு சோதனை செய்கிறது. இதன் மூலம்தான் கொரோனவை டெல்லி அரசு தீவிரமாக கட்டுப்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+