ஜிஎஸ்டி மார்ச் வசூல்.. 1.13 லட்சம் கோடியிலிருந்து 28,309 கோடியாக சரிவு.. மத்திய அரசு அதிர்ச்சி!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 28,309 கோடி ரூபாய்தான் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்தமாக வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் தொகை வெறும் 28,309 கோடி ரூபாய்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலகமே கொரோனா காரணமாக ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளது. கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் எல்லாம் பெரும் பொருளாதார சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா காரணமாக பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த வருட இறுதியில் பொருளாதரம் மிக மோசமான சரிவை சந்திக்கும். பலர் வேலையை இழக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உற்பத்தி துறை, ஐடி துறை மற்றும் சுற்றுலா துறை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் ஜிடிபி 2%க்கும் கீழ் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 28,309 கோடி ரூபாய்தான் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் இதே மாதம் ஜிஎஸ்டி வசூல் தொகை 1.13 லட்சம் கோடி ரூபாய் செய்யப்பட்டது. சென்ற வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது மிக மிக குறைவு ஆகும்.
இந்த மிக மோசமான ஜிஎஸ்டி வருவாய் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பொருளாதார சூழ்நிலை மிக மோசமாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வருவாயும் குறைந்து இருப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் நிதி கையிருப்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே லாக் டவுன் காரணமாக பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். ஜிஎஸ்டி வருவாயும் குறைந்து இருப்பதால் மத்திய அரசு பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். லாக் டவுன் காரணமாக மக்கள் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே கொஞ்சம் நடக்கிறது.
அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எதுவும் விற்பனை செய்யப்படுவது இல்லை. இதனால்தான் ஜிஎஸ்டி வருவாய் பெரிய அளவில் சரிந்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வருவாய் இழப்பில் இருந்து மீள இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களாவது ஆகும். மொத்தமாக லாக் டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியும் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications