டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்: 15 நாளில் ரூ. 946.49 கோடி பி.எப். பணத்தை பெற்ற 3.31 லட்சம் பேர்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 15 நாட்களில் ரூ946.49 கோடி பி.எப். பணத்தை பெற்ற 3.31 லட்சம் பேர் பெற்றுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்திலான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பணத்தை பெறுவதற்கு சலுகைகளையும் அரசு அறிவித்திருந்தது,

3.31 lakh PF withdrawal claims during Coronavirus Lockdown Perio

இதனடிப்படையில் கடந்த 15 நாட்களில் 3.31 லட்சம் பேர் பி.எப். தொகையைப் பெற்றுள்ளனர். அதாவது பி.எப். தொகையில் 75% அல்லது 3 மாதங்களுக்குரிய அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இதில் எது குறைவோ அந்த அளவை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அத்துடன் பி.எப். பணத்தை பெற ஆன்லைனில் கொரோனா வைரஸ் ஆப்சனும் இணைக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் ரூ946.49 கோடி பி.எப். பணம் சந்தாதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருப்பதால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER

Recommended Video

    Fake News Buster : எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா?

    இது தொடர்பாக டெல்லி மேற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் உத்தம் பிரகாஷ் கூறுகையில், எங்கள் மண்டலத்தில் இதுவரை 6300 சந்தாதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரூ15.5 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Employees Provident Fund Organisation said it has processed 3.31 lakh provident fund withdrawal claims amounting to Rs 946.49 crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X