டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை!

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்ததற்கு இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை - இந்தியா காட்டம்

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் முயன்று வந்தது. இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு மாதம் முன் பரிந்துரை செய்தார்.

    Coronavirus: India disagrees with WHO ban on HCQ usage

    ஆனால் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் சோதனையை உலக சுகாதார மையம் நிறுத்தி உள்ளது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்த சோதனை முடிவுகள் வந்த பின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்ததற்கு இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அதிகமாக பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!

    போலீஸ் அதிகாரிகள், முன்னிலை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் இதை உட்கொள்ள வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் உலக சுகாதார மையம் இதன் பயன்பாட்டிற்கு தடை விதித்து இருக்கிறது.

    இந்த நிலையில் உலக சுகாதார மையம் இந்த தடையை விதிக்கும் முன் அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த மருந்து எவ்வளவு பலன் அளிக்கும், எவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த மருந்து, இது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உலக சுகாதார மையம் கருத்தில் கொள்ளவில்லை .

    இந்த மருந்தின் பயன்களை கருத்தில் கொள்ளாமல் உலக சுகாதார மையம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: India disagrees with the WHO ban on HCQ usage and test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X