இந்தியாவில் 71 நாட்களில் மிக குறைந்த பாதிப்பு- நேற்று 80,834 பேருக்கு கொரோனா- 3,303 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 3,303 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் மொத்தம் 17,64,17,357 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். கொரோனாவால் உலக நாடுகளில் மொத்தம் 38,10,763 பேர் உயிரிழந்துள்ளனர்.

 Coronavirus: India reports 80,834 new cases, 3,303 deaths

கொரோனா 2-வது அலையில் இந்தியாவில்தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் நேற்று இந்தியாவில் மட்டும் 80,834 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் கடந்த 71 நாட்களில் மிக குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு இது.

மேலும் நேற்று ஒரே நாளில் 3,303 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா சிகிச்சைக்குப் பின் நேற்று மட்டும் 1,32,062 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,26,159. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையானது 95.26% ஆகவும் உள்ளது.

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,39,989; கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,80,43,446 ; இந்தியாவில் இதுவரையிலான கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,70,384. நாட்டில் இதுவரை மொத்தம் 25,31,95,048 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+