இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருவதாகவும் மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16116 ஆக உள்ளது.

இதில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2302. கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 519. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 211 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 3651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 365 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில் 1893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மொத்தம் 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 1407 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 70 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது அதிகரித்து வருகிறது.
குஜராத்தில் கொரோனாவின் தாக்கம் 1,000-த்தை தாண்டியுள்ளது. இங்கு மொத்தம் 1604பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆகும். உத்தரப்பிரதேசத்தில் 1084 பேரும் ஆந்திராவில் 603 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தெலுங்கானாவில் 844 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications