மீண்டும் மோடி உரையாற்றுவார்... அப்போது மிக கடுமையான அறிவிப்புகள் வரும்.... எச்சரிக்கும் ப. சிதம்பரம்
டெல்லி: கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார்; அப்போது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் கட்டுப்பாடுகளை அவர் வெளியிடக் கூடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையை கட்டுப்படுத்த நகரங்கள், பெருநகரங்களை 2 வாரங்களுக்கு மூட வேண்டும்; இது தொடர்பாக பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தார்.

நாட்டு மக்களுக்கு மோடி உரை
மேலும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடாவிட்டால் தாம் ஏமாந்து போய்விடுவேன் என்றும் ப. சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி இது போன்ற அறிவிப்புகளை வெளியிடவில்லை. கொரோனா தடுப்புகள் குறித்து அவர் விவரித்திருந்தார்.

மக்களின் ஊரடங்கு
மாறாக, மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் இந்த ஊரடங்கில் பங்கேற்க வேண்டும்; மாலை 5 மணிக்கு நமக்காக உழைப்போருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். பிரதமர் மோடியின் அறிவிப்பை உடனேயே வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டிருந்தார்.

ப.சி. எச்சரிக்கை
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ப. சிதம்பரம், நிலைமை எப்படி இருக்கிறது என பிரதமர் மோடி சோதித்து பார்த்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். அனேகமாக அவர் மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார். அப்போது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புதிய கட்டுப்பாடுகளை மோடி அறிவிக்கக் கூடும் என கூறியுள்ளார்.

விமர்சனம்- பாராட்டு
அதேநேரத்தில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கட்டுப்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்வீட் பதிவுகளைப் போடுவதும் பின்னர் உடனடியாக மோடியை ஆதரிப்பதுமாக ப.சிதம்பரம் பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications