ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகம்- அதி உச்சம்!
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 31,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் இது 32,719 ஆக இருந்தது. ஆனால் இந்தியாவில் இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது பாதிப்பு.

இந்தியாவில் 50 லட்சம் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,81,156 ஆக உயர்ந்திருக்கிறது. உலகில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு 4,382,263 ஆக உள்ளது.

இந்தியாவில் அதிகம்
உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரே நாளில் கொரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,290 பேர் கொரோனாவால் மாண்டனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 82,066.

அமெரிக்காவில் குணமடைந்தவர்கள்
ஆனால் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,99,947 ஆகவும் பிரேசிலில் கொரோனா மரணங்கள் 1,33,119 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 40,55,231 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,25,978.

இந்தியா ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 82,844 ஆகும். உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,42,361. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையானது 9,95,933ஆக மட்டுமே உள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications