கொரோனா பாதிப்பு குறைவான இடங்கள்.. இன்று முதல் அமலுக்கு வரும் லாக்டவுன் தளர்வு!
நாடு முழுக்க இன்று பாதி ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
டெல்லி: நாடு முழுக்க இன்று பாதி ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுக்க ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஊரடங்கு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி, ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல ஊரடங்கு மே 3ம் தேதி தொடரும்.

ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இன்றில் இருந்து ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் பாதி ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் பின் வரும் சேவைகள் செயல்படும்.
அதன்படி, ஐடி மற்றும் ஐடி தொடர்பான சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அச்சு, மின்னணு ஊடகம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டி.டி.எச், கேபிள் சேவைகள் இயங்கும். அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே டேட்டா மற்றும் கால் சென்டர் மையங்கள் செயல்படும்.
கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் செயல்படும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்திவாசிய பொருட்களை விற்பனை செய்ய மட்டும் செயல்படும். அனுமதி பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்
கூரியர் சேவைகள் செயல்படும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கிடங்கு சேவைகள் செயல்படும். சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், மோட்டல்கள் இயங்கும், என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சில சேவைகள் செயல்படாது.மருத்துவ காரணங்கள், பாதுகாப்பு நோக்கங்கள் தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணம் செயல்படாது. ரயில்கள் இயங்காது.பொது போக்குவரத்துக்கான பேருந்துகள் இயங்காது.
மெட்ரோ ரயில் இயங்காது. மருத்துவ காரணங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட சேவைகள் தவிர மற்ற பணிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படாது. அனைத்து கல்வி பயிற்சி, பயிற்சி நிறுவனங்களும் செயல்படாது.
டாக்சிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் செயல்படாது. சினிமா அரங்குகள், மால்கள், வணிக மையங்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், தியேட்டர்கள், சட்டசபை அரங்குகள், ஆடிட்டோரியங்கள் செயல்படாது.
ஆனால் அதே சமயம் மூன்று மாநிலங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். தெலுங்கானா, பஞ்சாப், டெல்லியில் முழு ஊரடங்கு தொடரும். பஞ்சாப், டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும். தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு தொடரும்.












Click it and Unblock the Notifications