இதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48895 கொரோனா கேஸ்கள்.. மிக மோசமான நாள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1337022 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 48895 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது.

455089 பேர் இந்தியாவில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 32514 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியா கேஸ்கள்

இந்தியா கேஸ்கள்

850107 பேர் மொத்தமாக இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 31406 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் கொஞ்சம் கூட குறையாமல் உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா எப்படி

மகாராஷ்டிரா எப்படி

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 357117 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 143714 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 199967 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் 278 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 13132 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகம் நிலைமை

தமிழகம் நிலைமை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9785 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 199749 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 53132 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 143297 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் 88 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 3320 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி நிலைமை

டெல்லி நிலைமை

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 128389 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 13681 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 110931 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் 32 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 3777 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் அதிகரிப்பு

கர்நாடகாவில் அதிகரிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 85870
பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 52788 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 31347 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் 110 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 1726பேர் பலியாகி உள்ளனர்.

https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-total-cases-in-india-crosses-13-3-lakhs-as-the-single-day-sees-48895-cases-392356.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+