ஒரே நாளில் 1.4 லட்சம் கேஸ்.. உலகம் முழுக்க கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. ரஷ்யாவை நெருங்கும் இந்தியா
டெல்லி: உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
உலகம் முழுக்க தற்போது கொரோனா காரணமாக 8,251,213 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக உலகம் முழுக்க 445,188 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் இதுவரை மொத்தமாக 4,299,845 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்றுதான் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தொட்டது. அதேபோல் பலி எண்ணிக்கை இன்று 45 ஆயிரத்தை தாண்டும் என்று கருதப்படுகிறது. உலகம் முழுக்க நேற்று 142568 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

அமெரிக்கா நிலை
அமெரிக்காவில் மொத்தம் 2,208,389 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 25439 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. கடந்த சில வாரங்களாக குறைந்த எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தினசரி எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வர தொடங்கி உள்ளது. அங்கு மொத்தம் 119132 பேர் பலியாகி உள்ளனர்.

பிரேசில் நிலை
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 928834 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் அங்கு பலி எண்ணிக்கை 45456 என்ற நிலையில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 35464 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ரஷ்யா எப்படி
நேற்று பிரேசிலில்தான் உலகிலேயே அதிகமாக ஒரே நாளில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதற்கு முன் எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு கேஸ்கள் பதிவானது இல்லை. ரஷ்யாவில் மொத்தம் 545458 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 8248 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video

இந்தியா நிலைமை
ரஷ்யாவை விரைவில் முந்தும் நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 11135 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக 354161 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 11921 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications