டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தொற்று... ஜெட் வேகத்தில் முந்திச் செல்லும் ஆந்திரா.... கர்நாடகா!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலேயே கொரோனா தொற்றில் தமிழகத்தை முந்திக் கொண்டு 7,39,719 எண்ணிக்கையுடன் ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 15,06,018 கொரோனா தொற்று எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தில் இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் 6,90,000 பேருக்கும், தமிழ்நாட்டில் 6,40,943 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 4,27,459 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Coronavirus update: Andhra Pradesh beats Tamil Nadu with 739,719 cases

நாட்டில் வெள்ளிக்கிழமை 73,272 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு இருந்தது. இத்துடன் நாட்டில் இதுவரைக்கும் 69,79,423 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு 1,07,416 ஆக உள்ளது. முதன் முறையாக கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8,93,000 ஆக குறைந்து இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 10,517 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. 8,337 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சிகிச்சை பெற்று 5,69,947 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் மட்டும் 9,891 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மனிதரிடம் இருந்து பரவிய கொரோனா... 10,000 மிங்க் விலங்குகள் உயிரிழப்பு!!அமெரிக்காவில் மனிதரிடம் இருந்து பரவிய கொரோனா... 10,000 மிங்க் விலங்குகள் உயிரிழப்பு!!

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று மட்டும் 3,591 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,91,194 தொற்று ஏற்பட்டு, நேற்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் 5,563 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 11,416 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு, 308 பேர் உயிரிழந்து இருந்தனர். இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் 15,17,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு 40,040 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் நேற்று மட்டும் 5,653 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 35 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்த மாநிலத்தில் இதுவரைக்கும் 6,194 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
Coronavirus update: Andhra Pradesh beats Tamil Nadu with 739,719 cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X