இன்றிலிருந்து ஹாட் ஸ்பாட் இல்லாத இடங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு.. எது செயல்படும்? எது செயல்படாது?
ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்று லிஸ்ட் வெளியாகி உள்ளது .
டெல்லி: ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் எதெல்லாம் செயல்படும், செயல்படாது என்று லிஸ்ட் வெளியாகி உள்ளது .
Recommended Video
நாடு முழுக்க இன்று முதல் பாதி ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுக்க ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது. ஹாட் ஸ்பாட் பகுதிகளில் எப்போதும் போல் லாக் டவுன் தொடரும்.

அதன்படி பின் வரும் விஷயங்கள் ஹாட்ஸ்பாட் இல்லாத இடங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்படும், கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் செயல்படும்.இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படும்.அனுமதி பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். கூரியர் சேவைகள் செயல்படும்.
ஐடி மற்றும் ஐடி தொடர்பான சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அச்சு, மின்னணு ஊடகம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டி.டி.எச், கேபிள் சேவைகள் இயங்கும்.அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே டேட்டா மற்றும் கால் சென்டர் மையங்கள் செயல்படும்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கிடங்கு சேவைகள் செயல்படும்.அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்பதற்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை சேவைகள் செயல்படும்.சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், மோட்டல்கள் இயங்கும்.
அதே சமயம் ஹாட்ஸ் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் பின் வரும் கட்டுப்பாடுகள் மே 3ம் தேதி வரை எப்போதும் போல் தொடரும். அதன்படி ரயில்கள் இயங்காது. பொது போக்குவரத்துக்கான பேருந்துகள் இயங்காது.மெட்ரோ ரயில் இயங்காது. மருத்துவ காரணங்கள், பாதுகாப்பு நோக்கங்கள் தவிர உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணம் செயல்படாது.
மருத்துவ காரணங்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட சேவைகள் தவிர மற்ற பணிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான, மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படாது. அனைத்து கல்வி பயிற்சி, பயிற்சி நிறுவனங்களும் செயல்படாது
சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது.20 பேருக்கு மேல் இல்லாத இறுதிச் சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அரசின் பட்டியலில் இல்லாத தொழில்துறை மற்றும் வணிக சேவைகள் செயல்பட முடியாது.அரசின் பட்டியலில் இல்லாத ஹோட்டல், லாட்ஜ் சேவைகள் செயல்படாது.டாக்சிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் செயல்படாது.சினிமா அரங்குகள், மால்கள், வணிக மையங்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், தியேட்டர்கள், சட்டசபை அரங்குகள், ஆடிட்டோரியங்கள் செயல்படாது.












Click it and Unblock the Notifications