திணறும் உ.பி.. அச்சத்தில் பெங்களூர்.. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் கொரோனா தாக்கியுள்ளது?
டெல்லி: இந்தியாவில் மொத்தம் 44 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. உத்தர பிரதேசமும் கேரளாவும்தான் இந்தியாவில் கொரோனா மூலம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
கொரோனா உலகம் முழுக்க தீவிரம் அடைந்து வருகிறது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது.

இந்தியா எப்படி
இந்தியாவில் மொத்தம் 44 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. இதில் கேரளாவில்தான் அதிக பேருக்கு கொரோனா தாக்கி இருக்கிறது. அங்கு ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா தாக்கியது. இந்த மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டுவிட்டனர். அதன்பின் தற்போது இத்தாலியில் இருந்து வந்த ஐந்து பேருக்கு கொரோனா தாக்கியது. அவர்களின் உறவினர் இன்னொருவருக்கும் கொரோனா தாக்கியுள்ளது. மொத்தம் அங்கு 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா நிலை
கர்நாடகாவில் நேற்றுதான் ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளது. பெங்களூரில் உள்ள ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் பெங்களூரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. பல்வேறு ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்து பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு நேற்று கொரோனா பரவி உள்ளது.

ஓமன் எப்படி
இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படவில்லை. அதே சமயம் ஹைதராபாத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

துபாய் நிலை
இவர் துபாயில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசம்தான் இந்த வைரஸ் காரணமாக மோசமாக திணறி வருகிறது. அங்கு 7 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எதுவும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

டெல்லி என்ன
அதேபோல் டெல்லியில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரில் ஒருவர் இத்தாலியில் இருந்தும், இன்னொருவர் பாங்காக்கில் இருந்தும் வந்தவர்கள். மற்ற மூன்று பேரும் அவர்களின் உறவினர்கள். இது போக இத்தாலியில் இருந்து இந்தியா வந்த 16 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களின் கைட் ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 44 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications