டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Social Distancing- கொரோனா பரவாமல் தடுக்க சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்போம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஒன்று கூடல்களை கூடுமானவரை தவிர்ப்பதை ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்றுதல் அவசியமாகும். இதனைத்தான் அனைத்து அரசுகளும் வலியுறுத்தியும் வருகின்றன.

கொரோனா என்பது மனிதர்களிடையே எளிதில் பரவக் கூடியதாக இருக்கிறது. இதனால்தான் மனிதர்கள் ஒன்று கூடும் இடங்களில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Coronavirus: What is Social Distancing?

மேலும் பொது கூட்டங்கள், பொது வழிபாடுக, ஒன்று கூடுதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. இப்படியான சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதன் மூலம் வைரஸ் நோய் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும் முடியும்.

மற்றொரு தனிமனிதராக உங்களுக்கு வைரஸ் தொற்று தாக்காமலும் இருக்கும். தனி மனிதர் மற்றும் சமூக நலன் கருதியே ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும் என்கின்றன அரசுகள். இதனைவிடுத்து எங்களது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்... அவற்றை கைவிட முடியாது என அரதப்பழமைவாதம் பேசுவதில் எந்த ஒரு பயனுமே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஈரான் அரசும் இப்படியான ஒன்று கூடல்களைத்தான் தவிர்க்க எச்சரித்தது. ஆனால் இதனை பொதுமக்கள் மீறுதலை வழக்கமாக வைத்ததாலேயே அந்த நாட்டு அரசு, இப்படியே போனால் பல லட்சம் பேர் பலியாகும் நிலை வரும் எனவும் எச்சரித்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சரி பொது நிகழ்ச்சிகளுக்குத்தான் போக வேண்டாம் எனில் பணிகளை எப்படி மேற்கொள்வது?

விஞ்ஞானமயமாகிவிட்ட இந்த காலத்தில் அலுவலகங்களுக்கு சென்றுதான் பணிபுரிய வேன்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிற வாய்ப்பை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. பெருமளவிலான பணியாளர்கள் ஒன்று கூடுவது அவசியம் என்கிற நிலையைக் கூட இத்தகைய வீட்டில் இருந்து பணிபுரிதல் வாய்ப்புகள் எளிதாக மாற்றிவிடுகின்றன. இதனை ஏற்கும் மனநிலைக்கு நாமும் முன்வர வேண்டும்.

கொரோனா.. எல்லா பார்க்கையும் இழுத்து மூடுங்க.. திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு! கொரோனா.. எல்லா பார்க்கையும் இழுத்து மூடுங்க.. திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

சீனாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியது. அதே சீனாதான் இப்போது இந்த தாக்குதலில் இருந்து விடுபட்டும் வருகிறது. இதற்கு காரணம் முழு வீச்சில் சமூக ஒன்று கூடல்களை தடுத்து நிறுத்தியதும்கூட என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் சமூக ஒன்று கூடல்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்துதல் அல்லது தவிர்த்தல் என்பது இதுபோன்ற காலங்களில் மிகவும் அவசியமானதே.

English summary
Here is the details of Social Distancing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X