டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூலை 14க்கு பிறகு.. நாட்டில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது.. ஆனா காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜூலை 14ம் தேதிக்கு பிறகு, முதல் முறையாக, இந்தியாவில், தினசரி கொரோனா நோய்த் தொற்று, 30,548 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88.45 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது. நேற்று காலை முதல் திங்கள்கிழமை காலை வரை நாடு முழுக்க கொரோனாவால் 435 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: With 30,548 new cases, India records lowest single-day spike since July

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 70 என்ற அளவில் உள்ளது. கொரோனா தாக்கப்பட்டதில் 82.49 லட்சம் பேர், நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

ஜூலை 14ம் தேதிக்கு பிறகு நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதை ஒப்பிட்டால், இப்போதுதான் முதல் முறையாக ஒரு நாளைய கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் இது மகிழ்ச்சியடையக் கூடிய விஷயமா என்பதுதான் கேள்வி.

Coronavirus: With 30,548 new cases, India records lowest single-day spike since July

ஏனெனில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம், நோய் பாதிப்பு குறைந்ததா, அல்லது, பரிசோதனை எண்ணிக்கை குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"லாஸ்லியா.. என்னை விட அவர் நல்லவர்.. ஜென்டில்மேன்".. கமல் வாயால் பாராட்டப்பட்ட அன்புள்ள "அப்பா"!

கடந்த வெள்ளிக்கிழமை முதல், 10 லட்சத்திற்கும் குறைவான சாம்பிள்கள்தான் பரிசோதிக்கப்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமை 8 லட்சம் பரிசோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. இதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
India recorded 30,548 new cases of Covid-19 in the 24 hours ending 9 am Monday. This is the lowest single day spike in cases since July 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X