நிலைமை மோசமாகிவிட்டது.. கொரோனா ஸ்டேஜ் 3ல் நுழைந்துவிட்டோம்.. இந்திய மெடிக்கல் அசோசியேஷன் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, நாம் ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 34000 கொரோனா கேஸ்கள் ஒரே நாளில் பதிவானது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1058318 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 26535 ஆக உயர்ந்துள்ளது.
நிமிடத்திற்கு நிமிடம் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 17 ஆயிரம் கேஸ்கள் வந்துள்ளது.

மோசமான பரவல்
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, நாம் ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஎம்ஏ தலைவர் விகே மோங்கா தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தினமும் வரும் கேஸ்கள்
தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இந்தியாவில் மிக மிகவும் மோசமான சூழ்நிலை ஆகும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முன்பு நகரத்தில் மட்டுமே கொரோனா பரவியது. தற்போது கிராமத்திற்கும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது மிக மோசமான அறிகுறியாகும். இதனால்தான் ஸ்டேஜ் 3 பரவலான சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறோம்.

மிக கடினம்
இதை கட்டுப்படுத்துவது கடினம். கிராமங்கள் முழுக்க கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நினைத்தை விட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க 70% பேருக்கு கொரோனா ஏற்பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும், அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா ஒப்புக்கொண்டது
கேரளாவிலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் சமூக பரவல் ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.ஆனால் இன்னும் மத்திய அரசு சமூக பரவலை ஒப்புக்கொள்ளவில்லை. கொரோனா சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசோ, தமிழக அரசோ கூறவில்லை. ஆனால் புதிய திருப்பமாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications