இளநிலை மருத்துவ படிப்பு.. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு
டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ல் தொடங்கும் என கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் தேதியை மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. இதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் 23 வரை முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய இடங்களுக்கு 2 ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5 ல் தொடங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை அகில இந்திய இடங்க்களுக்கு 3 ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க இருப்பதாக மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான 3-வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பு வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில ஒதுக்ககீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் இடம் பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதி 8,998, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications